தஞ்சை பெரிய கோவிலில் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் சின்னம் -
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மற்றும் இந்திய தொல்லியல் துறையினர் இணைந்து சிலைகளின் தொன்மை குறித்து நேற்றைய தினம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து காணாமல் போன மாமன்னன் ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் அங்கிருந்த பழமையான நடராஜர் சிலை உள்ளிட்ட 10 சிலைகள் களவு போயுள்ளதாகவும் அவற்றுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலை களையும் ஆய்வு செய்வதற்காகவே தொல்லியல் துறை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சிலைகளை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 4-வது முறையாக நேற்றையதினம் சிலைகளின் தொன்மை குறித்து நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கருவிகளின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் சின்னம் -
Reviewed by Author
on
October 22, 2018
Rating:

No comments:
Post a Comment