மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின் -
மேற்கிந்திய தீவு-இந்தியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் அதிக முறை நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஹர்பஜன் சிங் 41 முறை மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது அஸ்வின் 42 முறை ஒரே டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதால், ஹர்பஜனை பின்னுக்கு தள்ளி, அஸ்வின் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
அதே சமயம் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் சுழல் ஜாம்பவானுமாகிய அணில் கும்ப்ளே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 66 முறை நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின் -
Reviewed by Author
on
October 07, 2018
Rating:
No comments:
Post a Comment