எருக்கு செடியின் மகத்தான மருத்துவகுணங்கள் -
பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது.
‘தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு என எங்கும் விளையும்.
இதில் பல்வேறு மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. அவை என்ன என்பதை பார்ப்போம்.
- பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்தால், விஷம் இறங்கும்.
- இதன் இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்து, கடிவாயிலும் வைத்து கட்டினால் விஷம் இறங்கும். மூன்று துளி எருக்கன் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும்.
- குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும்.
- எருக்கு இலையை நெருப்பில் வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால், கட்டிகள் உடையும்.
- இலையை எரித்து, புகையை வாய்வழியாக சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும்.
- எருக்கன் பூவைக் காய வைத்துப் பொடியாக்கிக் இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும்.
- இதன் வேரை கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆறும்.
எருக்கு செடியின் மகத்தான மருத்துவகுணங்கள் -
Reviewed by Author
on
October 24, 2018
Rating:

No comments:
Post a Comment