அண்மைய செய்திகள்

recent
-

இந்தோனேசியா விமான விபத்தில் 189 பேர் பலி? கண்ணீர் சிந்தும் உறவினர்கள்:


இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் உதிரி பாங்கள் கடலில் மிதந்து வருவது கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிருடன் யாரும் இருப்பார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது என பாதுகாப்பு பிரிவின் தலைவர் முகமது ஸ்யாகி கூறியுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து, சுமத்ரா தீவு அருகில் இருக்கும் பங்கல் பினாங் நகரத்திற்கு இன்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் மாயமானது.
188 விமானிகளுடன் பயணித்த இந்த விமானம், 13 நிமிடங்கள் கழித்து விமான நிலையத்துடனான தொடர்பில் இருந்து விலகியது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமாகும்.
6 விமான ஊழியர்கள், இரண்டு விமான ஓட்டிகள், 181 பயணிகள் என 189 நபர்கள் மாயம். அந்த 181 பயணிகளில் 1 குழந்தை மற்றும் 2 பச்சிளங்குழந்தைகளும் பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மனம் உருகி வேண்டுதல். யாருக்கும் எதுவும் நடந்திருக்கக் கூடாது என மனம் உருகி பிரார்த்தனை செய்கின்றனர்.


கடலுக்குள் வீழ்ந்த விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டறியப்பட்டன. இந்தோனேசியாவின் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் முகமது ஸ்யாகி இது குறித்து கூறுகையில் “உயிருடன் யாரும் இருப்பார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தோனேசியா விமான விபத்தில் 189 பேர் பலி? கண்ணீர் சிந்தும் உறவினர்கள்: Reviewed by Author on October 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.