அண்மைய செய்திகள்

recent
-

உங்களின் கல்லீரலில் பாதிப்பு: வெளிக்காட்டும் அறிகுறிகள் இதுதான் -


மனித உடலின் உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கிய உறுப்பாகும். உலகளவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சில முக்கிய அறிகுறிகளை வைத்து கல்லீரல் சம்மந்தமான நோய் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
வயிறு வீக்கம் மற்றும் வலி
வயிறு வீக்கம் என்பது கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறியாகும். சில சமயம் வயிறுடன் சேர்ந்து கணுக்கால் கூட வீங்கும். அதே போல வயிறு வலி கூட இதன் அறிகுறி தான். இதை சாதாரண வயிற்று வலி என நினைக்கக்கூடாது.

மஞ்சள் காமாலை
தோல்களின் நிறம் மாறுவது, கண்கள் மஞ்சள் நிறமாக தெரிவதும் மஞ்சள் காமாலை அறிகுறியாகும்.
சிறுநீர் நிறமும் இந்த சமயத்தில் மாறும், கல்லீரலுக்கும் மஞ்சள் காமாலை நோய்க்கும் நெருங்கிய தொடர்புள்ளதால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அரிப்பு
உடலின் தோல்கள் காரணமேயில்லாமல் தொடர்ந்து அரித்து கொண்டிருந்தால் கல்லீரலில் கடும் பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளதாக அர்த்தமாகும். அதே போல தோலின் நிறம் சிவப்பாக அல்லது மஞ்சளாக மாறினாலும் இதன் அறிகுறி தான்.

மலக்கழிவில் மாற்றம்
கல்லீரலில் நோய் ஏற்ப்பட்டிருந்தால் அதிக நாள் மலச்சிக்கல், மலவாயில் எரிச்சல், மலத்தின் நிறத்தில் ஏற்படும் மாறுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
தொடர் வாந்தி
எதை சாப்பிட்டாலும் அல்லது சாப்பிடாவிட்டாலும் தொடர்ந்து வாந்தி வந்தால் கல்லீரல் நோய் தாக்கியிருப்பதாக அர்த்தமாகும், நச்சு சேர்வதால் இப்படி ஆகிறது, உடனே மருத்துவர்களை அணுகுதல் நலம்.

பசியின்மை மற்றும் உடல் சோர்வு
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் பசியின்மை தொல்லை ஏற்படும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் உடல் எடையும் குறையும்.
அதே போல உடல் எப்போது சோர்வாகவே இருப்பது மற்றும் குழப்பமான மனநிலையில் இருப்பதும் கூட இதன் அறிகுறி தான்.
குமட்டல்
கல்லீரல் சரியாக இயங்காமல் இருப்பின், குமட்டலை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு அவ்வப்போது குமட்டல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

வீக்கம்
ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும். எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.
உங்களின் கல்லீரலில் பாதிப்பு: வெளிக்காட்டும் அறிகுறிகள் இதுதான் - Reviewed by Author on October 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.