மன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் ...சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 89 வது நாளாக தொடர்சியாக இடம் பெற்றுக்கொண்டு வருகின்றது தெடர்ச்சியாக மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்படும் வருகின்றது
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T .சரவண ராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம் பெற்று வருகின்றது
கடந்த வாரம் இடம் பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசோகர மன்னார் மனித புதையில் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள் அனைத்தும் விடுதலை புலிகளின் காலத்தில் கொன்று புதைக்கப்பட்ட சிங்கள மக்களின் எச்சங்களாகவும் இருக்கலாம் எனவும்
தமிழர் புலம் பெயர்ந்த அமைப்புக்கள் இவ் மனித எச்சங்கள் இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களின் எச்சங்கள் என திரிவுபடுத்தி ஜக்கிய நாடுகள் சபைக்கு காண்பிப்பதாகவும் கருத்து தொரிவித்திருந்தார்.
மனித புதைகுழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கையிலேயே தடையவியல் நிபுணர்கள் இருக்கின்றனர் ஆனாலும் திட்டமிட்ட வகையில் குறித்த புதைகுழி தொடர்பான மாறுபட்ட எண்ணக்கருவை தோற்றுவிப்பதற்காக இந்தியாவில் இருந்து தடையவியல் நிபுணர்களை அழைத்துவருவதற்கு மன்னார் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர் எனவும் கருத்து தொரிவித்திருந்தார்
அந்த வகையில் இன்றய தினம் மனித புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சமிந்த ராஜபக்ஷவிடம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பாக வினவப்பட்டது.
குறித்த கேள்விக்கு பதில் அளித்த சட்டவைத்திய அதிகாரி தற்போது மனித புதை குழியினை அகழ்வு செய்யும் பனியும் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளே நடை பெறுகின்றது குறித்த மனித எச்சங்களின் காலப்பகுதி மற்றும் ஏனைய விபரங்களை அறியும் ஆய்வு பணி ஆரம்பிக்கப்படவில்லை நாங்கள் தற்போது முழுமையாக அகழ்வு பணியையே மேற்கொள்கின்றோம் எனவே யாராக இருந்தாலும் மன்னார் புதைகுழி தொடர்பான உண்மை நிலையை அறியாது எந்தவித கருத்துக்களையும் தொரிவிக்க வேண்டம்.
என்னோடு சேர்ந்த குழுவினர் முழுமையான ஆய்வின் பின்னர் துல்லியமான தகவல்களை வழங்குவோம் எனவே அதுவரை வீணான கருத்துக்கள் விவாதங்களை தவிர்குமாறு தொரிவித்திருந்தார் அத்துடன் அண்மையில் மன்னார் மனித புதை குழியை பார்வையிடுவதற்காக வந்த இந்திய சிவில் சமுக உறுப்பினர் வெறுமனே நீதிமன்ற அனுமதியுடன் புதைகுழியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களாக வந்தார்களே தவிர வேறு எந்த விதமான காரணங்களுக்காகவும் வருகை தரவில்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் இதுவரை 185 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 179 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் ...சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ
Reviewed by Author
on
October 17, 2018
Rating:
Reviewed by Author
on
October 17, 2018
Rating:




No comments:
Post a Comment