நடிகர் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு..........MeToo சர்ச்சைக்கு
தமிழ் சினிமாவில் MeToo பிரச்சனை வந்ததும் பெண்களின் பாதுகாப்புக்கு திரைப்பட துறையினர் என்ன செய்துள்ளார்கள் என்ற கேள்விஎழுந்தது.
இதனையடுத்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் இதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதன்படி நேற்று நடந்த சிறப்பு செயற்குழுவில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 'விசாகா குழு' செயல்படும் சட்டங்களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மை மகளிரும் உட்பட, குழுவாக அமையும்.
பிரச்சனைகளை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும் அதில் இடம் பெறுவார். அதற்க்கு ஆண்பால் பெண்பால் பாகுபாடின்றி பிரச்சினைகளை நடு நிலையோடு அணுகி தீர்வுகளை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் சகல பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்கிறது.
நடிகர் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு..........MeToo சர்ச்சைக்கு
Reviewed by Author
on
October 31, 2018
Rating:

No comments:
Post a Comment