மன்-மாவிலங்கேணி பாடசாலையில் மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு....
மன்னார் மன்/மாவிலங்கேணி றோ.க.த.க பாடசாலையில் கடந்த 14 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியான் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழாவும.
2018ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று மன்னார் கல்வி வலயத்தில் 1ம் இடத்தினையும் மாவட்ட ரீதியில் 3ம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்த செல்வி ஜெ.சௌமியா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை ம.அ.ஜெயசீலன் அடிகளாரின் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அளவக்கைப் பங்குத்தந்தை இந்து மதக் குருக்கள் நானாட்டான் கோட்டக்கல்வி அதிகாரி அயல் பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இப்பாடசாலையானது 2017 ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டு இவ்வாண்டு முதல் முறையாக க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : திரு. யே. எமில் ராஜா செயலாளர் பாடசாலை அபிவிருத்தி குழு
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

Reviewed by Author
on
October 19, 2018
Rating:

No comments:
Post a Comment