மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளருக்கு மாபெரும் மணிவிழா வரவேற்பு நிகழ்வு-படங்கள்
மன்னார் திருமதி.S.சுகந்தி செபஸ்ரியன் வலையக்கல்விப்பணிப்பாளருக்கு மாபெரும் மணிவிழா வரவேற்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் அதிபர் சங்கம் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடுக்கல்விவலைய அதிகாரிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மணிவிழா நிகழ்வானது 18-10-2018 மாலை மன்னார் பிரதான பாலத்தில் இருந்து ஆரம்பமாகி தேசிய பாடசாலைகளின் பான்ட் இசையுடன் விருந்தினர்களுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக இன்னியம் முழங்க விழாமேடையில் தமிழ் தாய் வாழ்த்தொழிக்க மங்களவிளக்கேற்றலுடன் அரம்பமானது.
இவ்விழாவிற்கு விருந்தினர்களாக.....
செ.உதயகுமார் கல்விப்பணிப்பாளர் வடமாகாணம் ஏனைய கல்விப்பணிப்பாளரகள் மறைமாவட்ட குருமுதல்வர் விக்ரர் சோசை அருட்தந்தையுடன் ஏனைய அருட்தந்தையர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் சர்வமதத்தலைவர்கள் அரச அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மணிவிழா நாயகி திருமதி.S.சுகந்தி செபஸ்ரியன் அவர்களின் கல்விப்பணியும் ஆளுமைப்பணபும் திறமான முகாமைத்துவ செயற்பாடும் சேவை நலனும் கவிகளாக பாடல்களாக ஆசிரியர்களாலும் அதிபர்களாலும் வாழ்த்துப்பாக்கள் இசைக்கப்பட்டது.
சிறப்பம்சமாக மணிவிழா நாயகி திருமதி.S.சுகந்தி செபஸ்ரியன் அவர்களின் 36வருடம் 05மாதம் 21 நாட்கள் அதாவது 26-04-1982-17-10-2018வரையுமான காலப்பகுதியில்..........ஆசிரியராக பிரதிக்கல்விப்பணிப்பாளராக வலையக்கல்விப்பணிப்பாளராக மடு மன்னார் மேலதிக கல்விப்பணிப்hளராகவும் பிரதி செயலாளராகவும் வடக்குமாகாணத்தில் திறமையான கல்விப்பணியாற்றி ஓய்வுபெறும் மணிவிழா நாயகி திருமதி.S.சுகந்தி செபஸ்ரியன் அவர்களின் சேவையின் அங்கீகாரமாக நினைவுகளை மீட்டிப்பார்க்கும் வகையில் மணிவிழா மலர்-60 வெளியீடும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து மணிவிழா நாயகி திருமதி.S.சுகந்தி செபஸ்ரியன் அவர்களிற்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் நினைவுப்பரிசுகளும் வழங்கி வாழ்த்தியது கல்விச்சமூகம்.
விழா இனிதே நிறைவுற்றது.
-வை.கஜேந்திரன்-
மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளருக்கு மாபெரும் மணிவிழா வரவேற்பு நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
October 19, 2018
Rating:
Reviewed by Author
on
October 19, 2018
Rating:













































No comments:
Post a Comment