முல்லைத்தீவில் காணாமற்போனோரின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் -
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் காணாமற்போனோரின் உறவினர்களின் அழுவலகத்திற்கு முன்னே மேற்கொள்ளப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நல்லாட்சி அரசே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?
உலக நாடுகளே எங்களுக்காக குரல் கொடுக்கமாட்டீர்களா? இனியும் காலம் தாழ்த்தாது எமக்கான நீதியை நல்லாட்சி அரசு வழங்கவேண்டும் என்ற கோசங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமற்போனேரின் உறவினார் கானமற்போன தமது உறவினர்கள் தொடர்பில் நல்லாட்சி அரசிடம் நீதியான பதிலை எதிர்பார்த்து 603 நாட்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் காணாமற்போனோரின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் -
Reviewed by Author
on
October 31, 2018
Rating:

No comments:
Post a Comment