தமிழ் அரசியல் கைதிகளைத் தேடிச்சென்ற புதிய அரசின் பிரபலம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்றைய தினம் வெலிக்கடை மற்றும் மகசின் ஆகிய சிறைச்சாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெற்றோரும் அங்கு சென்றுள்ளனர்.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நேற்றைய தினம் பதவியேற்றுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ச கைதாகி சிறைச்சாலையில் இருக்கும்போது அங்கிருந்த அரசியல் கைதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் இருக்கும்போது அரசியல் கைதிகளுடன் நட்பு ஏற்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு உதவும் நோக்கில் நாமல் ராஜபக்ச இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகளைத் தேடிச்சென்ற புதிய அரசின் பிரபலம்
Reviewed by Author
on
October 30, 2018
Rating:

No comments:
Post a Comment