பிள்ளையாருக்கு அருகில் இடம்பிடித்த மாதா!
இன்றைய உலகில் மனித இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பது 80 சதவீதம் கேள்விக்குறியாகவே உள்ளது.
தத்தமது மதங்களுக்காகவும், இனத்திற்காகவும் ஆயுதமேந்தி போராடும் சமூகத்தைத்தான் நாம் எமது கண்கொண்டு நோக்கியுள்ளோம்.
இந்நிலையில், மதங்களை ஒன்றிணைத்து நல்லிணகத்தைப் பேணும், நல்லிணக்கத்தைக் கற்றுக்கொடுக்கும் ஒரு பாடசாலை சுவிட்சர்லாந்தில் உள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒலிர்கோன் பகுதியில் உள்ள தமிழ் பள்ளி ஒன்றில் இவ்வாறு பிள்ளையார், சரஷ்வதி தேவி மற்றும் கத்தோலிக்கர்கள் தாயாக போற்றும் கன்னி மரியாள் ஆகியோரின் உருவச்சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இதனை அங்குள்ள மாணவர்களும் கற்றுக்கொள்வதுடன், இது போல கடைப்பிடிக்கவும் தம்மைப் பழக்கப்பட்டுத்திக்கொள்கின்றனர்.
இவ்வாறான முன் உதாரணங்களே இந்த சமகாலத்தில் இந்த உலகத்தினருக்கு தேவை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
பிள்ளையாருக்கு அருகில் இடம்பிடித்த மாதா!
Reviewed by Author
on
October 08, 2018
Rating:

No comments:
Post a Comment