மன்.மாவிலங்கேணி RCTMSபாடசாலை மாணவி J.சௌமியா புலமைப்பரீட்சையில் 3ம் இடம்
மன்னார் மாவட்டத்தில் புலமைப்பரீட்சையில் 183புள்ளிகள் பெற்று 3ம் இடத்தினை மன்னார் கல்விவலையத்திற்குட்பட்ட மன்.மாவிலங்கேணி RCTMS பாடசாலை மாணவி J.சௌமியா பெற்றுள்ளார்.
T.ஜெயக்குமார் கயல்விழி தம்பதிகளின் மகளான J.சௌமியா மன்னார் மாவட்டத்தில் 3ம் இடத்தினைப்பெற்றுள்ளார்.
தங்களின் எதிர்கால இலக்கு என்னவென்றுவினவியபோது எதிர்காலத்தில் சிறந்த கணக்காளராக வரவேண்டும் அத்தோடு எனது இவ்வுயர்வுக்கு காரணமாண இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் கற்பித்தலில் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களான ஆரம்பத்தில் இருந்து டெனெஸ்வரி
அமல ஜீவன்,மரியான் நேசன்ஆசிரியர்கள் அவர்களுக்கும் அதிபர் அருட்தந்தை குணசீலன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
J.சௌமியா இம்மாணவியை நெறிப்படுத்திய பாடசாலைச்சமூகத்திற்கும் மன்னார் கல்விவலையத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொகுப்பு- வை-கஜேந்திரன்-
மன்.மாவிலங்கேணி RCTMSபாடசாலை மாணவி J.சௌமியா புலமைப்பரீட்சையில் 3ம் இடம்
Reviewed by Author
on
October 07, 2018
Rating:

No comments:
Post a Comment