கந்தககாற்றினை சுவாசித்து சாதித்து காட்டியவர்கள் இந்த மாணவர்கள்-செயலாளர் S.கேதீஸ்வரன்-(படம்)
நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது யுத்த வடுக்களை நெஞ்சில் சுமந்து சாதித்து காட்டியவர்கள் இந்த மாணவர்கள் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இவ்வாருடம் (2018) ஆம் ஆண்டு இடம் பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்ட ரீதியாக 187 புள்ளிகளைப பெற்று முதல் இடத்தை பெற்றுக்கொண்ட கருங்கண்டல் றோ.க.தமிழ் கலவன் பாடசாலை மாணவன் திருப்பதிப்பிள்ளை திருக்குமரன் மற்றும் 184 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 2 ஆம் இடத்தை பெற்ற அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தயாளன் ஜேம்ஸ் தேவப்பிரியன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை 18-10-2018 காலை மாந்தை மேற்கு பிரதேசச்செயலகத்தில் இடம் பெற்றது.
-இதன் போது கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்த பின் உரை நிகழ்த்துகையிலேயே மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,
நாட்டில் இடம் பெற்ற இறுதி யுத்த காலப் பகுதியில் பிறந்த மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தவர்கள்.
அந்த வகையில் ஆகக் குறைந்த வசதிகளுடன் அந்த மாணவர்கள் கல்வி கற்று பிறந்த இடத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
அவர்களை வாழ்த்துவதுடன் தங்கள் குடும்பச் சுமைகளையும் மறந்து இப்படி சாதனை செய்யும் மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். யுத்த வடுக்களை நெஞ்சில் சுமந்து சாதித்து காட்டிய இந்த மாணவர்கள் போற்றப்படவேண்டியவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
-குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆ.சந்தியோகு , கைத்தொழில் அமைச்சின் செயலாளர் றிப்கான் பதியுதீன் , மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கந்தககாற்றினை சுவாசித்து சாதித்து காட்டியவர்கள் இந்த மாணவர்கள்-செயலாளர் S.கேதீஸ்வரன்-(படம்)
Reviewed by Author
on
October 19, 2018
Rating:
No comments:
Post a Comment