மன்னார் மடு 'தேக்கம்' கிராமத்து மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி-
மன்னார் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 'தேக்கம்' கிராம மாணவர்கள் தமக்கு உரிய முறையில் பேரூந்து சேவைகள் இடம் பெறுவதில்லை எனவும் இதானல் தாம் தாமதித்தே பாடசாலைக்கு செல்வதாகவும் கூறி குறித்த கிராம மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மாதா கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் பேரூந்தை இடை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த மாணவர்களின் போராட்டத்திற்கு பலனாக இன்று (19) வெள்ளிக்கிழமை முதல் குறித்த மாணவர்களின் நலன் கருதி இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் பேரூந்து ஒன்று சேவையில் ஈடு படுத்தப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.எம்.சீலனின் முயற்சியினாலும், மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முயற்சியினாலும் குறித்த பேரூந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவர்களின் போராட்டத்திற்கு பலனாக இன்று (19) வெள்ளிக்கிழமை முதல் குறித்த மாணவர்களின் நலன் கருதி இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் பேரூந்து ஒன்று சேவையில் ஈடு படுத்தப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.எம்.சீலனின் முயற்சியினாலும், மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முயற்சியினாலும் குறித்த பேரூந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மடு 'தேக்கம்' கிராமத்து மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி-
Reviewed by Author
on
October 19, 2018
Rating:

No comments:
Post a Comment