இது தான் சர்க்கார்! அடுத்த சாதனை இதோ - போடு செம மாஸ்
சர்க்கார் படத்தை எதிர்நோக்கி மொத்த விஜய் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. உலகம் முழுக்க அவருக்கு ஃபேன்ஸ் கூட்டம் அதிகமாகியிருக்கிறது.
கேரளாவில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகும். இங்கு போலவே அங்கும் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள். இந்நிலையில் சர்க்கார் படத்திற்கான ரசிகர் மன்ற டிக்கெட் விற்பனையும் இப்போதே தொடங்கிவிட்டதாம்.
கேரளாவில் விஜய்யின் மெர்சல் படம் வெளியான போது 190 ரசிகர் மன்ற காட்சிகள் போடப்பட்டதாம். அதே போல சர்க்கார் படத்திற்கு குறைந்த பட்சம் 250 ரசிகர் மன்ற காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்களாம். இதனால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
இது தான் சர்க்கார்! அடுத்த சாதனை இதோ - போடு செம மாஸ்
Reviewed by Author
on
October 24, 2018
Rating:

No comments:
Post a Comment