அண்மைய செய்திகள்

recent
-

உலகையே ஆச்சரியப்படுத்திய சுவிஸ் ஜனாதிபதி: ஒரு ஆச்சரிய செய்தி -


பல நாடுகளின் தலைவர்கள் கருப்புப்பூனை படை சூழ வெளியே தலை காட்டாமலே பயணிக்கும் நேரத்தில், ஆச்சரியவிதமாக, சுவிஸ் ஜனாதிபதி சாலையோரம் தரையில் அமர்ந்து ஆவணம் ஒன்றை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

அதுவும் சுவிஸ் ஜனாதிபதியான Alain Berset, சுவிட்சர்லாந்தில் அல்ல, நியூயார்க்கில் உள்ள ஒரு சாலையின் அருகே அமர்ந்திருந்தார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை சந்திப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தபோதுதான் சுவிஸ் ஜனாதிபதியான Alain Berset இப்படி சாலையோரம் அமர்ந்திருந்தார்.
சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்த, சுவிஸ் தலைவர்களோ தங்கள் நாட்டில் இது சர்வசாதாரணம் என்கிறார்கள்.

இந்த சம்பவம் முக்கியமாக ஆப்பிரிக்க மக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர், உகாண்டா அதிபர் பாதுகாவலர்களின் வாகனங்களின் படை சூழ, சாலையோரத்தில் கூட சொகுசுச் சேரில் அமர்ந்திருக்கும் படத்தையும், அதன் பக்கத்திலேயே சுவிஸ் ஜனாதிபதி தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும் முகநூலில் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய மனப்பான்மை கொண்ட ஆப்பிரிக்கத் தலைவர்கள்தான் தங்கள் நாட்டு மக்களை ஏழ்மையாக வைத்திருப்பதற்குக் காரணம் என்று செய்தி பதிட்டுள்ள அவர், ஒரு போன் காலுக்காக உகாண்டா அதிபர் பிஸியான போக்குவரத்துக்கே இடைஞ்சல் ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், நேரெதிராக சுவிஸ் ஜனாதிபதியோ அமெரிக்காவில் சாலையோரம் அமர்ந்து தனது நோட்ஸை படித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
சுவிஸ் ஜனாதிபதி மட்டுமல்ல, வேறு பல சுவிஸ் தலைவர்களும் மிகவும் எளிமையாகவே இருக்கிறார்கள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் ஃபெடரல் கவுன்சிலரான Doris Leuthard ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.

Micheline Calmy-Rey என்பவர் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சராக இருந்தபோது கேக் ஒன்றினால் ஒருவன் அவரது முகத்தில் தாக்கினான்.இத்தகைய சம்பவங்கள் அபூர்வமாக நடைபெற்றாலும்கூட சுவிஸ் தலைவர்கள் சைக்கிளிலும் ரயிலிலும் பயணம் செய்வதையும் பாதுகாவலர்கள் இல்லாமல் பொது இடங்களில் நடமாடுவதையும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல பாராட்டத்தக்கதுமாகும்.
உலகையே ஆச்சரியப்படுத்திய சுவிஸ் ஜனாதிபதி: ஒரு ஆச்சரிய செய்தி - Reviewed by Author on October 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.