தமிழர்களுக்கு இப்படியான அவல நிலை ஏன்? மனம் உருகும் பௌத்த தேரர் -
தமிழர்கள் என்றும் போராட்டத்தை கைவிடக்கூடாது, யாழ்ப்பாணமாக இருக்கலாம், மலையகத்தவர்களாக இருக்கலாம் அனைவரும் ஒன்றுகூடுங்கள், ஒரே எதிரொலியை கொடுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் ரூபா வேதனம் கோரி தொடர்ச்சியாக மலையக மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் பிரதேசங்கள் எங்கும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஆதரவு தெரிவித்து குறித்த பௌத்த தேரர் தனது முகநூல் தளத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
குறித்த காணொளியில்,
எங்களை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய எமது தாய் எமது கண்முன்னே இரத்தம் சிந்தி, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, வியர்வை சிந்தி எம்மை இவ்வளவு உயரத்தில் வளர்த்துவிட்டார்கள்.
மீண்டும் எமது அடுத்த சமூகம் இது போன்ற சிக்கல்களை பார்க்கக்கூடாது, மலையகத்தில் என்ன நோக்கத்திற்காக அரசியல் செய்யப்படுகின்றது என்று எமக்குத் தெரியும். எனவே மலையகத்தில் வாழ்கின்ற வாலிபர்களே அரசியலை விட்டு வெளியில் வாருங்கள், அரசியல் தேவையில்லை, ஆயுதம் தேவையில்லை, ஆயிரம் ரூபா சம்பளம்தான் தேவை.
பயப்படாதீர்கள் நாங்கள் இருக்கின்றோம், நான் இருக்கின்றேன், எவ்வேளையிலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க நாங்கள் இருக்கின்றோம். இதை மனதில் வைத்துக்கொண்டு உங்களது போராட்டத்தை தொடருங்கள்.
யாருக்காகவும் பயப்படவேண்டாம். எமது போராட்டம் நியாயமானது, எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் இருக்கின்றார், எல்லாம் வல்ல புத்தபெருமான் எங்களுடன் இருக்கின்றார். எனவே அரசியலை விட்டு வெளியே வந்து உமது போராட்டத்தை தொடருங்கள் என பௌத்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர்களுக்கு இப்படியான அவல நிலை ஏன்? மனம் உருகும் பௌத்த தேரர் -
Reviewed by Author
on
October 22, 2018
Rating:

No comments:
Post a Comment