அமெரிக்காவில் தமிழ்மொழிக்கு கிடைத்திருக்கும் இடம்! -
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் வெளிநாட்டு மொழிகளில் தெலுங்கு மொழி முதலிடத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 86 வீதம் அளவில் தெலுங்கு மொழி பரவியுள்ளது.
அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஆய்வு நிலையம் செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் ஒன்று என்பதுடன் உலகில் அதிகமான பேசும் 20 மொழிகளில் ஒன்றாகும்.
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்ற இந்தியாவில் இருந்து செல்வோரில் அதிகளவானவர்கள் தெலுங்கு பேசும் மக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தி முதலிடத்தில் உள்ளது. 8 லட்சத்து 63 ஆயிரத்து 77 பேர் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழிகளில் இந்தி முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இரண்டாம் இடத்தில் உருது மொழி உள்ளது. 5 லட்சத்து 7 ஆயிரத்து 329 பேர் உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.
உருது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் பேசப்படுகிறது. இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் உருது ஆறாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் மூன்றாவது இடத்தில் குஜராத்தி மொழி உள்ளது. குஜராத்தி மொழியை பேசும் 4 லட்சத்து 34 ஆயிரத்து 263 பேர் அமெரிக்காவில் உள்ளனர். இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் குஜராத்தி 6 வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் நான்காவது இடத்தில் தெலுங்கு மொழி உள்ளதுடன் அமெரிக்காவில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 414 தெலுங்கு மக்கள் இருக்கின்றனர். தெலுங்கு இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் நான்காவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் ஐந்தாம் இடத்தில் பங்களி மொழி உள்ளது. 3 லட்சத்து 50 ஆயிரத்து 928 பங்காளி மக்கள் அமெரிக்காவில் இருக்கின்றனர்.
பங்காளி மொழியை பேசுவோர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் பங்காளி இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் பங்களாதேஷ் நாட்டின் அரச மொழியாகவும் உள்ளது.
அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் ஆறாவது இடத்தில் பஞ்சாபி மொழி உள்ளது. அமெரிக்காவில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 650 பஞ்சாபி மக்கள் வசித்து வருகின்றனர்.
பஞ்சாபி மொழி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் அதிகளவில் பேசப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பேசும் மொழிகளில் பஞ்சாபி 11 வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் ஏழாவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது. அமெரிக்காவில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 732 தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழ் இந்தியாவில் அதிகமாக பேசும் மொழிகளில் 5 வது மொழியாகும்.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் பேசப்படுகிறது. அத்துடன் தமிழ், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் நாடுகளின் அரசமொழியாகவும் இருந்து வருகிறது.
அமெரிக்காவில் தமிழ்மொழிக்கு கிடைத்திருக்கும் இடம்! -
Reviewed by Author
on
October 22, 2018
Rating:

No comments:
Post a Comment