பிறப்புறுப்பு மற்றும் கருப்பை இன்றி பிறந்த பெண்மணி!
மனிதர்களில் பலர் பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கின்றனர்; இந்த பதிப்பில் பிறப்புறுப்பு மற்றும் கருப்பை இன்றி பிறந்து வாரத்திற்கு 4 முறை கலவி கொண்டு வாழும் பெண்மணியின் கதை பற்றி பார்க்கலாம்.", "keywords": "Real Life Story: She Born Without Vagina And Uterus, lady born without vagina and womb, real life story of a woman, பிறப்புறுப்பு மற்றும் கருப்பை இன்றி பிறந்து வாரத்திற்கு 4 முறை கலவி கொள்ளும் பெண்மணி,
அதிசயமான குறைபாட்டுடன் பிறந்த பெண்மணி", "articleBody":"மனிதர்களில் பலர் பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கின்றனர்; இந்த குறைபாடுகள் மனிதர்கள் பிறக்கும் பொழுதே தோன்றலாம் அல்லது வாழ்வின் பயணத்தில் ஏதேனும் ஒரு சம்பவத்தின் பொழுது குறைபாடுகள் ஏற்படலாம். எந்த குறைபாடு தோன்றினாலும் அதை எதிர்த்து போராடி வாழ்வில் ஜெயிப்பதே, எடுத்த மனித பிறப்பிற்கு ஒரு நல்ல அர்த்தத்தை தரும்.
இந்த பதிப்பில் பிறப்புறுப்பு மற்றும் கருப்பை இன்றி பிறந்து வாரத்திற்கு 4 முறை கலவி கொண்டு வாழும் பெண்மணியின் கதை பற்றி படித்து அறியலாம். ஆண்ட்ரியா ட்ரிகோ என்னும் பெண்மணி ஒரு நல்ல பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்; அவர் பிறந்த பொழுது குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது. குடும்பத்தின் செல்ல பிள்ளையாக ஆண்ட்ரியா வளர்க்கப்பட்டு வந்தார்; அவர் பிறந்த சமயத்தில் எல்லா குழந்தைகளையும் போல் எந்த வித குறைபாடும் இல்லாதவராய் தான் காணப்பட்டார்.
உடலில் நோய் நொடிகளுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை; ஆரோக்கியமாக இருப்பவர் போல் தான் தோன்றினார். ஆண்ட்ரியா தன் குடும்பம், படிப்பு, நண்பர்கள் என்று சந்தோஷமாக வளர்ந்து வந்தார்; தனது பெண் தோழிகள் பலரும் வயதுக்கு வந்த வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்தை எட்டிக் கொண்டு இருந்தனர். ஆனால், ஆண்ட்ரியா 1 வயது ஆகியும் பூப்படையாமல் இருந்தார்; தன் வயது பெண்கள் எல்லாம் பூப்படைந்து விட்டனர், தான் மட்டும் ஏன் பூப்படையவில்லை என்ற கேள்வி ஆண்ட்ரியாவின் மனதில் எழுந்தது.
தனது இந்த சந்தேகத்திற்கான விடை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்தார் ஆண்ட்ரியா; இந்த கேள்விக்கான விடையை மருத்துவ பரிசோதனையால் மட்டுமே தர முடியும் என்று முடிவு எடுத்து, நகரிலேயே தலை சிறந்த மருத்துவரை சென்று சந்தித்து, தனது பிரச்சனையை பற்றி கூறி பரிசோதனை செய்து கொண்டார்.
மருத்துவர் முழு உடல் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளை ஆண்ட்ரியாவின் உடலில் நடத்தினார்; பரிசோதனையின் முடிவில் ஆண்ட்ரியா பிறக்கும் பொழுதே பிறப்புறுப்பு மற்றும் கருப்பை இல்லாமல் பிறந்து இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இந்த முடிவை ஆண்ட்ரியாவிடம் தெரிவித்த பொழுது அவர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. உடனே கழிவறை சென்று தனது பிறப்புறுப்பை ஆராய்ந்து வந்தார்.
மேலும் படிக்க: குழந்தையுடன் விமானத்தில் பயணிக்கும் அன்னை செய்த இந்த செயலால் உயிரிழந்த குழந்தை! தனது பிறப்புறுப்பு உள்ளது ஆனால் மருத்துவர் இல்லை என்பதை கேட்டு குழப்பமுற்ற ஆண்ட்ரியாவிற்கு மருத்துவர் எடுத்துரைக்க தொடங்கினார்; அதாவது வெளியில் தெரியும் உடல் பாகம் வெளித்தோற்றத்திற்கு மட்டுமே, ஆனால், உடலின் உட்புறமாக பிறப்புறுப்பு மற்றும் கருப்பைக்கான எந்த ஒரு அமைப்பும் இல்லை. இதனால் தான் ஆண்ட்ரியாவின் உடலில் பிறப்புறுப்பிலிருந்து எந்த ஒரு வெளியேற்றமும், மாதவிடாய் சுழற்சியும் ஏற்படவில்லை.
தனது நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கி கொண்ட ஆண்ட்ரியா தனது கனவுகளை குறித்து எண்ணி மிகவும் மனவருத்தம் அடைந்தார். வருத்தத்தின் அழுத்தம் தாங்காமல் மருத்துவரிடம் தனது கனவுகளை தெரிவித்து - அதாவது எல்லா பெண்களுக்கும் இருப்பது போல, திருமணம் செய்து, கலவி கொண்டு, குழந்தை பெற்று கொள்ள வேண்டும், மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையை தெரிவித்தார் .
ஆண்ட்ரியா! மருத்துவர் ஆண்ட்ரியாவின் ஆசைகளை கேட்டு விட்டு சற்று சங்கடம் அடைந்து பின் அவளிடம் நீ அறுவை சிகிச்சை செய்து பிறப்புறுப்பை பெற முடியும்; பிறப்புறுப்பை பெற்ற பின் எல்லோர் மாதிரியும் உன்னால் உடலால் உறவு கொள்ள முடியும். ஆனால் கருப்பையை பெற முடியாது; குழந்தை வேண்டும் என்றால் வாடகைத்தாய் மூலம் பெற்று கொள்ளலாம். உனது உடலில் கருப்பை தான் இல்லையே தவிர கரு முட்டைகள் உள்ளன
சோதனை குழாய் மூலம் கூட குழந்தை பெற்று கொள்ளலாம். மேலும் படிக்க: நான் அலுவலகத்தில் இருக்கும் பொழுதே என் பனிக்குடம் உடைந்து விட்டது - போராட்ட பிரசவம்! மருத்துவர் தந்த தீர்வின் படி பிறப்புறுப்புக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார்; தன்னை பற்றி தன் குடும்பத்தாருக்கு எதையும் ஆண்ட்ரியா தெரிவிக்கவில்லை. பின் சில வருடங்களில் தனது மனதை கவர்ந்த ஃபிராங்க் என்பவரிடம் தன்னை பற்றிய விவரங்களை கூறி, திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டு, பிராங்க் இதற்கு ஒத்துக்கொள்ளவே இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர். ஆண்ட்ரியாவின் பிறப்புறுப்பு சரிவர இயங்க அவள் வாரத்திற்கு 4 முறை உடலால் கணவருடன் உறவு கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார்!
மருத்துவர் கூறியபடி வாரத்திற்கு 4 முறை உறவு கொண்டு மிகவும் சந்தோஷமாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்; தான் குழந்தையை பெற்று கொள்ளாமல் வேறு எந்த முறை மூலமும் குழந்தை பெற்று கொள்ளப்போவது இல்லை என்று முடிவு செய்தார். அவள் கணவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவே, தன்னை போல் பிறந்த பல ஆண்களையும் பெண்களையும் கண்டறிந்து உதவ தொடங்கினார்.
குழந்தை குறித்து குடும்பம், தெரிந்தவர் - தெரியாதவர் கேட்கும் கேள்விகள் ஆண்ட்ரியாவின் மனதை காயப்படுத்தின; மேலும் உறவில் தன் வயதை ஒத்த பெண்கள் குழந்தை பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதை காணும் பொழுது தனக்கு ஒரு குழந்தை இல்லாமல் போயிற்று என்ற ஏக்கம் ஆண்ட்ரியாவின் மனதில் ஏற்பட்டது. இந்த ஏக்கம் அவர் மனதில் வளர்ந்து கொண்டே வருவதாகவும், பின்னாளில், குழந்தை பற்றி தான் எடுத்த முடிவை மாற்றி கொள்ள வாய்ப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.
ஆண்ட்ரியாவிற்கு ஏற்பட்ட குறைபாடு Mayer-Rokitansky-Küster-Hauser (MRKH) syndrome என்று அறியப்படுகிறது. ஆண்ட்ரியா தன்னை போல் இருக்கும் ஆண், பெண் மற்றும் குழந்தை பிறப்பில் பிரச்சனைகளை சந்திக்கும் தம்பதியருக்கு உதவி வருகிறார். அவர் செய்யும் சேவையை பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன; TEDx பேச்சாளராக மாறி உள்ளார். குழந்தை இல்லையா என்று கேட்டு பெண்களை நோகடிக்கும் சமூகத்திற்கு சாட்டை அடி பதில்களை அளித்து, மற்றவர்க்கு உதவி வருகிறார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் குழந்தை கனவு மெய்ப்பட்டு அவர் பிள்ளை குட்டிகளுடன் வாழ வாழ்த்துவோமாக!
பிறப்புறுப்பு மற்றும் கருப்பை இன்றி பிறந்த பெண்மணி!
Reviewed by Author
on
October 11, 2018
Rating:

No comments:
Post a Comment