அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் அபூர்வ நோயினால் உயிருக்கு போராடிய இளைஞனின் பரிதாபம் -


இலங்கையில் அபூர்வமான நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் நண்பர்கள் ஈடுபட்ட போதும், தோல்வியில் முடிந்துள்ளது.

அரிய வகை நோயான T-ALL எனப்படும் லியுகேமியா என்ற நோயில் பாதிக்கப்பட்ட 26 வயதான தீக்ஷன அபேசேகர உயிரிழந்துள்ளார்.
நோயினை குணப்படுத்த தேவையான 60 இலட்சம் ரூபாவினை நண்பர்களினால் சேகரித்த போதும், உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

தீக்ஷன போராடி பொறியியலாளராக வாழ்க்கையில் சாதித்த போதிலும், வாழ முடியாமல் உயிரிழந்துள்ளார்.
தீக்ஷன அபேசேகர பொரளை கன்னங்கர வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்று, கொழும்பு தேஸ்டன் வித்தியாலயத்தில் கணித பிரிவில் உயர் தரம் கற்றுள்ளார். பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் கற்கைககளை மேற்கொண்டவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொறியியலாளராகியுள்ளார்.

சிவில் பொறியியலாளராக சேவை செய்யும் இந்த இளைஞன், மிகவும் அரிய வகை நோயான T-ALL எனப்படும் லியுகேமியா என்ற நோயில் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பல துன்பங்களை அனுபவித்த இளைஞனை காப்பாற்ற அவரது நண்பர்கள் ஒன்றிணைந்தனர். 60 இலட்சம் ரூபா சிகிச்சைக்காக தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. நண்பரை காப்பாற்ற வேண்டும் என போராடிய நண்பர்கள் ஒருவாறு பணம் சேகரித்துள்ளார். எனினும் அவரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த அதிரச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது நண்பர்கள் கண்ணீருடன் பேஸ்புக்கில் சோகத்தை பதிவிட்டுள்ளனர்.
இலங்கையில் அபூர்வ நோயினால் உயிருக்கு போராடிய இளைஞனின் பரிதாபம் - Reviewed by Author on October 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.