கலைமதி மற்றும் இளங்கலைமதி விருது வழங்கி கௌரவிப்பு....
அனுசரணையுடன்
மாந்தைமேற்கு கலாசார பேரவை மற்றும் கலாசார அதிகார சபையும் இணைந்து
நடாத்துகின்ற பிரதேச இலக்கிய விழா 02-11-2018 மதியம் 1- 30 மணியளவில்
மன்.அடம்பன்MMV பாடசாலை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
திரு.S.கேதிஸ்வரன் மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் தலமையில்மிகவும் சிறப்பாக இடம்பெற்றது இவ்விழாவிலே கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது
கலைமதி மற்றும் இளங்கலைமதி விருது பெற்றுக்கொண்டவர்கள் இதோ.....- ஜேசுதாசன் சாரா நீராஜா- சித்திரரக்கலை
- பெலிக்ஸ் ஜெனிவர்-சித்திரக்கலை
- டெலிஸ்ரன் நிஷாந் -மிருதங்க இசை ஆகிய மூவருக்கும் இளம்கலைமதி விருதும்
- சந்தியாப்பிள்ளை அருளானந்தம்-கீபோட் வாத்தியக்கலை
- பெரியசாமி முத்துக்கருப்பன்-பாடல் எழுத்துருவாக்கம்
- முஹமட் இமாம் ஹன்பல்-எழுத்தாளர் இயற்றுறை-
- வெற்றிச்செல்வி வேலுசந்திரகலாஎழுத்தாளர் இயற்றுறை-பல்கலை
- கலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு மிருதங்க இசைஆகிய ஐவருக்கும் அவர்களது கலைச்சேவையினைப்பாராட்டி சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி விருந்தினர்களால் கலைமதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கலைமதி மற்றும் இளங்கலைமதி விருது வழங்கி கௌரவிப்பு....
Reviewed by Author
on
November 03, 2018
Rating:

No comments:
Post a Comment