உலகிலேயே முதல் முறையாக! மில்லியன் டொலருக்காக மனைவியின் மரணத்திற்கு ஆலோசனை வழங்கிய கணவருக்கு சிறை
கடந்த 2014ஆம் ஜெனிபர் என்பவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தனது கணவரின் செயல்பாட்டின் காரணமாக தற்கொலைக்கு முன்னரே ஜெனிபர் நாள்பட்ட வலி, மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளார், அதற்கு காரணம் இவரது கணவர் கிரஹாம் மோரண்ட்.
தனது மனைவியின் ஆயுள் காப்பீட்டு பலன்களை பெறுவதற்காக இவ்வாறு செயல்பட்டுள்ளார். மனைவி இறந்துபோனால் 1.4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை பெறுவதற்காக, தனது மனைவியை மூளை சலவை செய்துள்ளார்.
ஒருவரது பலவீனத்தை பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு கிரஹாம் மறுப்பு தெரிவித்தாலும், அவரது ஆலோசனை இன்றி ஜெனிபர் தற்கொலைக்கு செய்துகொண்டிருக்க மாட்டார் என்று நீதிமன்றம் நியமித்த குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது மனைவி தற்கொலை செய்துகொள்வதற்காக ஆலோசனை வழங்கிய குற்றத்திற்காக 10 வருட சிறைத்தண்டனையையும், தற்கொலைக்கு உதவியதற்காக ஆறு வருட சிறைத்தண்டனையும் கிரஹாமுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இருவேறு சிறைத்தண்டனையும் ஒரே நேரத்தில் தொடங்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருவர் மற்றொருவருக்கு தற்கொலை செய்துகொள்வதற்கு ஆலோசனை வழங்கியதற்காக தண்டனை விதிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்று நீதிபதி டேவிஸ் தீர்ப்பின் போது கூறியுள்ளார்.

உலகிலேயே முதல் முறையாக! மில்லியன் டொலருக்காக மனைவியின் மரணத்திற்கு ஆலோசனை வழங்கிய கணவருக்கு சிறை
Reviewed by Author
on
November 04, 2018
Rating:
No comments:
Post a Comment