அண்மைய செய்திகள்

recent
-

115 கிலோ எடை கொண்ட சிறுமி... நோயாகவே மாறிய அகோர பசி:


14 வயதான சொந்தம் மகள் நள்ளிரவிலும் பசியால் அழுது அடம்பிடிக்கும்பொது என்ன செயவது என தெரியாமல் விழி பிதுங்கி நிர்க்கின்றனர் கேரளாவில் ஒரு பெற்றோர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிந்து மற்றும் பிஜு ஆகியோரின் மகள் கோபிகா. 14 வயதான குறித்த சிறுமி தொடர்ந்து பசி காரணம் அவதிப்பட்டு வருகிறார்.

அகோர பசியே சிறுமி கோபிகாவை வதைக்கும் முக்கிய பிரச்னை. பகல் அல்லது நள்ளிரவு என நேரம் காலம் பார்ப்பதில்லை.
கோபிகாவுக்கு 2 வயது இருக்கும்போது இந்த பிரச்னை முதன் முறையாக ஏற்பட்டுள்ளது. தற்போது 14 வயதாகும் சிறுமி கோபிகாவின் உடல் எடை 115 கிலோ.
ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட சிறுமியால் வாய் பேசவும் முடியாது. இருப்பினும் பசியால் துடித்துடித்து அழும்போது அவரது பெற்றோரான பிஜுவும் பிந்துவும் கண்கலங்கி நிர்க்கின்றனர்.
பாடசாலைக்கு செல்ல முடியாத சிறுமி கோபிகாவுக்கு அரசு சார்பில் குடியிருப்புக்கு வந்தே கல்வி அளிக்கப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமி கோபிகாவின் தந்தை பிஜுவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
ஆனால் அதன் தாக்கத்தால் பல மாதங்கள் கோமாவில் இருந்துள்ளார். பின்னர் எழுந்து நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, பிழைப்புக்காக லொட்டரி விற்பனைக்கு இறங்கியுள்ளார்.
ஆனால் வழியில் தலைசுற்றி விழுவது பதிவாக நடந்து வந்ததால் அதுவும் தடைபட்டது.
சிறுமி கோபிகாவின் சிகிச்சைக்காக வீடு மற்றும் இருந்த நிலங்களை விற்றுள்ள இந்த குடும்பம் தற்போது வாடகை குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர்.
115 கிலோ எடை கொண்ட சிறுமி... நோயாகவே மாறிய அகோர பசி: Reviewed by Author on November 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.