இத்தாலியை தாக்கிய கோர புயல்! பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு -
கடந்த ஒரு வாரமாக இத்தாலியை மிரட்டிக்கொண்டிருந்த புயல் நேற்று கரையை கடந்தது. ஆனால், அப்போது பெய்த பலத்த மழையால், வடக்கு வெனிடோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் சிசிலி, தெற்கு சர்டினியா ஆகிய பகுதிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மிலிசியா எனும் ஆற்றின் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால், பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் 12 பேர் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பலத்த காற்று வீசியதால் மரங்கள் விழுந்தும், வீடுகள் இடிந்தும் விழுந்ததால் 17 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை 30 பேர் வரை பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை மூட நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் Matteo Salvini சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் காடுகள் இந்த புயலின் தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், பாதிப்புகளை சரிசெய்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த 40 பில்லியன் யூரோக்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.




இத்தாலியை தாக்கிய கோர புயல்! பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு -
Reviewed by Author
on
November 05, 2018
Rating:
No comments:
Post a Comment