கூட்டமைப்பிற்கும், ஜே.வி.பிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை -
எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, பிமல் ரத்னாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.
இவ்விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன் பின்னணியிலேயே தற்போது இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.
கூட்டமைப்பிற்கும், ஜே.வி.பிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை -
Reviewed by Author
on
November 05, 2018
Rating:

No comments:
Post a Comment