ஆபரணங்களுக்காக 5000 ஆண்டு பழமையான கல்லறைகளை நாசம் செய்த கொள்ளையர்கள் -
Jerusalem Kuchu என்று அழைக்கப்படும் புராதன கல்லறை ஒன்றை நாசம் செய்த கொள்ளையர்கள் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நகைகளைக் கொள்ளையடிப்பதற்காக அவர்கள் உடல்கள் எந்த கலங்களில் வைத்து புதைக்கப்பட்டிருந்ததோ அவற்றையெல்லாம் உடைத்து நாசம் செய்துள்ளனர்.
பல கல்லறைகளிலிருந்த உடல்களையெல்லாம் ஒரு இடத்தில் போட்டு அவற்றிலிருந்த ஆபரணங்களை திருடுவதற்காக அத்தனை உடல்களையும் ஓரிடத்தில் குவித்து வைத்துள்ளதை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
அதிகாரிகள் திருடப்பட்ட மற்றும் நாசம் செய்யப்பட்ட பொருட்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திருடர்களைத் தேடும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள், கிடைத்த உடல் பாகங்களை பதப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
ஆபரணங்களுக்காக 5000 ஆண்டு பழமையான கல்லறைகளை நாசம் செய்த கொள்ளையர்கள் -
Reviewed by Author
on
November 06, 2018
Rating:

No comments:
Post a Comment