7தமிழர்களின் விடுதலைக்காக உலக ஈழத்தமிழர்களின் கையெழுத்து -
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
இவர்கள் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்தது .
அதனை தொடர்ந்து அமைச்சரவை கூடி 7 பேரை விடுவிக்கலாம் என தீர்மானம் இயற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பியது.
ஆனால், தற்போது வரை அந்த தீர்மானம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக ஆளுநருக்கு, மத்திய - மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரும் வகையில் கையெழுத்து வாங்கி வருகின்றனர், தமிழ் உணர்வாளர்கள்.
அதன்படி அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள இலங்கை தமிழ்ச் சங்கத்தின் 49ஆம் ஆண்டு விழா கடந்த 3ந்தேதி நடைபெற்றது.
அந்த விழாவில், ஏழுபேரின் விடுதலைக்காக உலக தமிழ் அமைப்பு முன்னெடுத்த கையெழுத்து வேட்டையில் ஈழத்தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு தந்தனர்.
பொதுமக்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்தம் அப்படிவங்களை உலக தமிழ் அமைப்பு விரைவில் தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளது.
இந்த கையெழுத்து படிவத்தில் உலக தமிழ் அமைப்பு, TGTE, USTPAC, Pearl, NCCT, BTF ( British Tamil Forum), CTC (Canadian Tamil Congress ), NAT( North American Tamils), இலங்கை தமிழ்ச் சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டது. அவர்களும் அதில் கையெழுத்திட்டு வழங்கியுள்ளனர்.
7தமிழர்களின் விடுதலைக்காக உலக ஈழத்தமிழர்களின் கையெழுத்து -
Reviewed by Author
on
November 06, 2018
Rating:

No comments:
Post a Comment