57 வயதில் 100 குழந்தைகளுக்கு தந்தையான அதிர்ச்சி? -
அமெரிக்காவை சேர்ந்த பீட்டர் எலென்ஸ்டைன் என்ற 57 வயதான நடிகர், உடனடி கிடைக்கும் பணத்திற்காக தன்னுடைய விந்தணுக்களை ஆன்லைன் மூலம் விற்க ஆரம்பித்துள்ளார்.
நடிகராக வேண்டும் என்னுடன் ஆசையால் 20 வயது முதலே விந்தணுக்களை வாரத்திற்கு 5 முறை என விற்க ஆரம்பித்துள்ளார். ஒரு நபருக்கு £ 57 பவுண்டுகள் பணமும் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் 57 வயதான பீட்டருக்கு சமீபத்தில் ராச்சேல் (24) என்ற இளம்பெண் ஒரு குறுச்செய்தி அனுப்பியிருந்தார். அதில், பீட்டர் எல்லாம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் உங்களுக்கு மிகவும் விசித்திரமான சூழ்நிலைகளில் இந்த செய்தியினை அனுப்பியிருக்கிறேன். தவறான நபருக்கு அனுப்பியிருந்தால், நான் முன்கூட்டியே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

இது எங்கள் அனைவருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். அது கொண்டு வரக்கூடிய ஆச்சரியத்தை நான் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய கடந்த காலம் பற்றி நான் உங்களிடம் கூறுகிறேன்.
நான் செயற்கை கருத்தரித்தல் காரணமாக 1994 இல் பிறந்தேன். என்னுடைய அம்மா எப்போதும் குழந்தை வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தார். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக தான் நான் பிறந்தேன்.

நான் குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதற்கான காரணம் தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும். நீங்கள் தான் என்னுடைய அம்மாவிற்கு விந்தணுவை விற்றவர் என்பதை நான் நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஆரம்பத்தில் இந்த செய்தியை பார்த்த பீட்டர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, சிரிக்க ஆரம்பித்தார். ஆனால் அதன் உள்ளே முழுவதையும் படித்ததும், ஆச்சர்யத்துடன் அந்த இளம்பெண்ணை சந்திக்க விரும்பியுள்ளார்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ சோதனையில், ராச்சேல் அவருடைய குழந்தை என்பது உறுதி செய்யப்பட்டது. இதே போன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு 24 குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுபோன்று 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பீட்டரின் விந்தணுவால் பிறந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். அவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் தற்போது இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
57 வயதில் 100 குழந்தைகளுக்கு தந்தையான அதிர்ச்சி? -
Reviewed by Author
on
November 06, 2018
Rating:
No comments:
Post a Comment