இரு இளைஞர்கள் பலி -ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து,
இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
தென்னிலங்கையிலிருந்து யாழ். நோக்கி சென்றுக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கி வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த உருந்துருளியும் விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.
மேலும், விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றொருவர் வைத்தியசாலைக் கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விபத்தில் உயிரிழந்தவரில் ஒருவர் கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த செல்வராஜா கஜீபன்(18) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, மற்றைய இளைஞன் தொடர்பில் எந்த தகவலும் வெளியாக வில்லை என்றும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு இளைஞர்கள் பலி -ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து,
Reviewed by Author
on
November 07, 2018
Rating:

No comments:
Post a Comment