102 வது நாளில்18 சிறுவர்களின் மனித எச்சங்கள் மீட்பு ....படங்கள்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 102 வது நாளாக தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது தெடர்ச்சியாக மழை பெய்கின்ற போதும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவண ராஜா மேற்ப்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம் பெற்று
வருகின்றது
அந்த வகையில் இன்றைய தினம் மனித புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சட்டவைத்திய அதிகாரி
இந்த வாரம் முழுவதும் இடம்பெற்ற அகழ்வு பணி தொடர்பான தகவல்களை தெரிவித்தார் குறிப்பாக இன்றய தினத்துடன்
102 வது தடவையாக மனித எச்சங்கள் அகழ்வுபணிகள் இடம் பெறுவதாகவும் இதுவரை 232மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 224 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இதுவரையான அகழ்வு பணிகளின் போது கிடைக்க பெற்ற மனித எச்சங்களில் 18 மனித எச்சங்கள் சிறுவர்களுடயது எனவும் பெண்கள் தொடர்பான விபரங்கள் முழு பரிசோதனையின் பின்னரே தெரியவரும் எனவும் தெரிவித்தார்
அத்துடன் கடந்த வாரத்தில் சந்தேகத்திற்க்கு உரிய விதமாக சில தடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதகவும் அதில் மோதிரம் போன்ற ஒரு தடய பொருளும் மாபிளை ஒத்த ஒரு தடய பொருளும் கிடைக்கப்பெற்றுள்ளதகவும் தெரிவித்துள்ளார்.
அதே வகையில் குறித புதைகுழியில் இருந்து கிடைக்க பெற்ற முக்கிய தடைய பொருளான மெலிபன் பக்கற் தொடர்பான அறிக்கையானது நீதி மன்றத்துக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தனக்கு அவ் அறிக்கை தொடர்பான விபரங்கள் தெரியாது எனவும் தெரிவிதார்.

102 வது நாளில்18 சிறுவர்களின் மனித எச்சங்கள் மீட்பு ....படங்கள்
Reviewed by Author
on
November 07, 2018
Rating:

No comments:
Post a Comment