ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு காரணம் என்ன? தடுக்க இதை செய்யுங்கள் -
ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும், இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை.
ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மேலும் இந்த எண்ணிக்கையின் குறைபாட்டால் ஆண்மைக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
ஆண்மை குறைபாட்டிற்கு காரணங்கள் என்ன?
- அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப்பழக்கம், நீரிழிவு நோய், மனநோய்கள், இரத்த கொதிப்பு, சில நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஆணுறுப்பு விறைப்படைகிறது.
- அதிகமான வெப்பத்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது, உதாரணத்திற்கு இராசயன தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத்துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
- விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.
- நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்பநிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும்.
- இதுதவிர கைப்பேசியின் கதிர்வீச்சு ஆண்மைக் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. கைப்பேசியின் எலக்ட்ரோ மேக்னடிக் அலைகள் விந்தணு சேதம் ஏற்படுத்துகிறது என்றும் கருத்து நிலவுகிறது.
- இதுதவிர, ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் ஹார்மோன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
ஆண்மை குறைவை தடுக்க உதவும் மருத்துவ குறிப்புகள்
- முருங்கைகாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருகும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.
- நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
- அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
- கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
- ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும்.
- வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
- தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும்.
- அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு காரணம் என்ன? தடுக்க இதை செய்யுங்கள் -
Reviewed by Author
on
November 23, 2018
Rating:

No comments:
Post a Comment