மன்னார் மனித புதைகுழி.....இரு வாரங்களுக்கு மூடப்படவுள்ளது.
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த வெள்ளிக்கிழமை 104 வது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வார விடுமுறை என்பதனால் சனி மற்றும் ஞாயிறு தினம் இடம் பெறவில்லை
இந்த் நிலையில் 105 வது தடவை அகழ்வு பணியானது 12.11-2018 திங்கள் இடம் பெறும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் 12-11-2018 திங்களும் மனித புதைகுழி அகழ்வு பணியானது இடம் பெறவில்லை என அறிய முடிகின்றது. அத்துடன் இரு வார காலத்திற்க்கு குறித்த அகழ்வு பணியானது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது தொடர்சியாக மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவண ராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் இடம்பெற்று
வருகின்றது
இதுவரையான அகழ்வு பணிகளின் முடிவின் படி
232 க்கு அதிகமான மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 224 அதிகமான மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அத்துடன் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத மேலதிக மனித எச்சங்களை அப்புறப்படும்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது
இந்த நிலையில் முன் அறிவிதல் இன்றி திடீர் என அகழ்வு பணியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது அகழ்வு பணி நிறுத்தம் தொடர்பான எந்தவித அறிவுருத்தல்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
மாந்தை திருக்கேதீஸ்வரப்புதைகுழிபோல் ஆகிவிடுமோ.......என்ற அச்சம் மக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் எழுந்துள்ளது.

Reviewed by Author
on
November 13, 2018
Rating:

No comments:
Post a Comment