சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 17 மீனவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல்....
சட்டவிரோதமான முறையில் கடலட்டை மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள்
மன்னார் நீதவான் நீதிமன்றில் கடற்தொழில் திணைக்களத்தால்
ஆஐர்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும்
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை 10.11.2018இரவு மன்னார் சிலாபத்துறை பகுதியில்
சட்டவிரோதமான முறையில் ஆறு படகுகளில் சென்ற 17 மீனவர்கள் சிலிண்டர் மூலம் கடலட்டை பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் றோந்து சென்ற கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் மாட்ட நீரியல்வள கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தனர்.
இவ் 17 மீனவர்களையும் பொறுப்பேற்ற மன்னார் கடற்தொழில் திணைக்கள
அதிகாரிகள் ஆறு படகு மீனவர்களுக்கும் எதிராக தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்து ஞாயிற்றுக் கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் 17 மீனவர்களையும் ஆஐர்படுத்தப்பட்டனர்
.
இவர்களை தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் விசாரனைக்காக நேற்று திங்கள் கிழமை 12.11.2018 திகதியிடப்படடிருந்தது.இவ் வழக்கானது நேற்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா முன்னிலையில் விசாரனைக்கு அழைக்கப்பட்டபோது
நான்கு படகு மீனவர்கள் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சிலிண்டர் மூலம் கடலட்டை பிடித்ததாக இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.
இதில் ஒரு படகில் நான்கு பேரும், மற்றையப் படகில் மூன்று பேரும், மற்றைய இரு படகுகளிலும் தலா இருவரும் இவ் சட்டவிரோத கடலட்டை மீன் பிடியில் ஈடுபட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் இவர்கள் பிடித்த கடலட்டைகளை 40 ஆயிரம் ரூபா பிணைமுறியில் எடுத்துச் செல்ல நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.
ஏனைய இரு படகுகளில் தலா மூன்று மீனவர்கள் தொழிலுக்குச்
சென்றிருந்தவேளையில் இவர்கள் பகலில் மட்டுமே கடலட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படடிருந்தபொழுதும் இவர்கள் சட்டவிரோதமாக இரவில் கடலட்டை பிடித்ததாக இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவர்களும் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல
அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இவர்கள் பிடித்த கடலட்டைகளை 25 ஆயிரம் ரூபா பிணைமுறியில் விடுவிக்கப்பட்டன.
அத்துடன் இவர்கள் தொழிலுக்கு கொண்டு சென்ற ஆறு படகுகளும் அதன்
உபகரணங்களும் தலா மூன்று லட்சம் ரூபா பிணை முறியில் எடுத்துச் செல்ல
உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் நீதிமன்றம் கோரும் பட்சத்தில் மீன்பிடி
உபகரணங்களை மன்றில் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
இவ் வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் உனைஸ் பாரூக், செபநேசன் லோகு மற்றும் அகர்சன், ஹஸ்மி ஆகியோர் சந்தேக நபர்கள் சார்பாக ஆஐராகியிருந்தனர்.
சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 17 மீனவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல்....
Reviewed by Author
on
November 13, 2018
Rating:

No comments:
Post a Comment