மூளைக்கட்டி நோய் வெளிபடுத்தும் முக்கிய அறிகுறிகள்: அலட்சியம் வேண்டாம் -
அத்தகைய கட்டி மூளையை நெருக்குவதால் மூளையின் செயல்திறன் மற்றும் உடலின் இயக்கம் ஆகியவை தடைபட்டு பெரியளவில் பாதிப்பை உண்டாக்கும்.
அந்த வகையில் மூளையில் கட்டி உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னவென்பதை தெரிந்துக் கொள்வோம்.
தொடர்ச்சியான தலைவலி
தொடர்ச்சியான தலைவலி இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது மூளைக்கட்டி இருப்பதன் அறிகுறியாகும்.
பேசும் போது தடுமாற்றம்
பேசும் போது தடுமாற்றம், தெளிவற்ற பேச்சு மற்றும் பார்வை இழப்பு ஆகியவை கூட மூளைக்கட்டியின் அறிகுறிகள் ஆகும்.கை, கால்களின் செயலிழப்பு
பலவீனம் மற்றும் சோம்பல் போன்ற உணர்வுகளும், நம்முடைய கை, கால்களின் செயலிழப்பு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மூளைக்கட்டி இருப்பதை குறிக்கும்.
குமட்டல் அல்லது வாந்தி
குமட்டல் அல்லது வாந்தி போன்ற வயிற்றுக் கோளாறுகள் மற்றும் உடல் ஆரோக்கியமின்மை போன்ற பிரச்சனை நீண்ட காலம் நீடித்தால், அது மூளைக் கட்டி இருப்பதன் அறிகுறி.அடிக்கடி மனநிலை மாற்றம்
மூளையில் கட்டி உள்ளவர்களுக்கு அடிக்கடி மனநிலை மாற்றம் அடையும். அதாவது கோபம், பதட்டம், சிரிப்பு போன்று எந்த மனநிலையிலும் அடிக்கடி மாறுவார்கள்.
கருவுறாமை
மூளையில் கட்டி ஏற்பட்டால் அது பிட்யூட்டரி சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களை பாதிக்கும். அதனால் பெண்கள் கருவுறாமை போன்ற பிரச்சனையை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகிறது.உடல் சமநிலையினை இழத்தல்
நம் உடல் சமநிலையினை இழந்து ஒருபுறமாக சாந்தவாறு நடக்கும் நிலை ஏற்பட்டால், அது மூளையில் கட்டி இருப்பதை குறிக்கிறது.
மூளைக்கட்டி நோய் வெளிபடுத்தும் முக்கிய அறிகுறிகள்: அலட்சியம் வேண்டாம் -
Reviewed by Author
on
November 09, 2018
Rating:

No comments:
Post a Comment