சீ.வி.விக்னேஸ்வரன் கட்சியிலிருந்து விலகிவிட்டார் -
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவார் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் அண்மையில் புதிய கட்சியை ஆரம்பித்திருந்தார்.
இதையடுத்து அவர் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவார்.
மாறாக அவருக்கு எதிராக எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
சீ.வி.விக்னேஸ்வரன் கட்சியிலிருந்து விலகிவிட்டார் -
Reviewed by Author
on
November 07, 2018
Rating:

No comments:
Post a Comment