அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது! முடியாது என்றால்... சாதனைத் தமிழனின் பதிவு -


இந்த நாட்டில் நூற்றுக்கு எண்பது வீதம் இருப்பது சிங்கள பௌத்தர்களே, இதனால் இந்த நாடு அவர்களுக்கே உரித்தானது என சாதனைத் தமிழன் என்று வர்ணிக்கப்படும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் நாயகனாக விளங்கும் இலங்கை தமிழரான முத்தையா முரளிதரன் சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய நேர்காணலிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
நான் தமிழன். முஸ்லிம், சிங்களம் என பலரும் இங்கு உள்ளனர். நாம் எல்லோரும் மனிதர்கள் தான். என்னை வெட்டினாலும் இரத்தம் வரும், அவர்களை வெட்டினாலும் இரத்தம் தான் வரும்.
1977இல் எங்களுடைய வீடு தீக்கிரையாகியது. தந்தையின் உடம்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 18 தையல் போடப்பட்ட தழும்பு தற்பொழுதும் உள்ளது.
நாம் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் பிழைத்தோம். எனினும் என்னுடைய தந்தை நாட்டை விட்டு போகவில்லை. எமது உறவினர்கள் அனைவரும் நாட்டை விட்டு சென்றார்கள்.

அவர்கள் தற்பொழுது இந்தியாவில் இருக்கிறார்கள். எனினும் நாம் போகவில்லை. 1983 இலும் எங்களுக்கு எதுவும் ஆகவில்லை. மக்கள் நம்புகின்றார்கள் தாம் இலங்கையர்கள் என்பதை.
எமது தாத்தாமார் இந்தியாவிலிருந்து தான் வந்தார்கள். எனினும் தற்பொழுது நாம் இலங்கையர்களாக ஆகிவிட்டோம். நாம் இலங்கையில் தான் இருக்கின்றோம்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தவறுகளை செய்திருக்கிறார்கள்.
இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். யுத்தம் என்பது அப்பாவி மக்கள் உயிரிழப்பது தான். இல்லையென்றால் அதை யுத்தம் என சொல்லமாட்டார்கள்.

2009இல் யுத்தம் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஜனநாயகம் இல்லை, உரிமைகள் கிடைக்கவில்லை என கோரப்படுவதாயின், நாமும் நேர்மையாக இதனை பார்க்க வேண்டும்.
இந்த நாட்டில் நூற்றுக்கு எண்பது வீதம் இருப்பது சிங்கள பௌத்தர்களே. அவர்களுக்கே இந்த நாடு உரித்தானது, எவ்வளவு தான் இல்லையென்றாலும்.
இலங்கையர்களாக இல்லாமல் மதத்தின் அடிப்படையில் பார்த்தோமானால் நாம் சிறுபான்மை இனம். நான் என்ன கேட்கிறேன் என்றால் இவ்வாறான பிரச்சினை நடக்கும் போது நானும் பாடசாலைக்கு சென்றேன் தானே.
எனக்கு திறமை இருந்ததால் பிரகாசித்தேன். இந்த முழு இலங்கை நாடும் மதத்தின் அடிப்படையிலான எனக்கு ஆதரவளித்தார்கள்? என வினவியுள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த இருவர் மாத்திரமே நாட்டிலுள்ள ஏழை மக்கள் குறித்து அவதானம் செலுத்தினார்கள். இதனை நீங்களே யாரென்று அறிந்து கொள்ளுங்கள்.
நான் அரசியலில், ஏழை மக்களுக்கு உதவி செய்து அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வருபவர்களுக்கே ஆதரவளிப்பேன்.
எனக்கு இந்த நாட்டு மக்கள் உதவியிருக்கிறார்கள். என்னை உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்திற்கு நாம் அரசியல்வாதிகளை அனுப்புவது நாட்டை முறையாக நடத்திச் செல்லவும், மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதற்காகவும் தானே.

எனவே இதனை எம்மால் செய்ய முடியாது, அதனை எம்மால் செய்ய முடியாது என அவர்கள் சொல்ல முடியாது. கொடுத்த வேலையை செய்ய வேண்டும். முடியாது என்றால் விட்டுச் செல்ல வேண்டும்.
யுத்தம் நடந்த போது இருந்த பயம் 2009இற்கு பின்னர் இருக்கவில்லை. அது தானே சுதந்திரம் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது! முடியாது என்றால்... சாதனைத் தமிழனின் பதிவு - Reviewed by Author on November 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.