அண்மைய செய்திகள்

recent
-

வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இன்சைட்! நாசா விஞ்ஞானிகள் கண்ணீருடன் கொண்டாட்டம் -


நாசாவின் ரூ.5000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இன்சைட் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்ததை, விஞ்ஞானிகள் அனைவரும் ஆனந்த கண்ணீருடன் கொண்டாடி வருகின்றனர்.

1967ம் ஆண்டு முதலே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக இருக்குமா என்பதை ஆராய்ச்சி செய்யும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக இதுவரை அனுப்பப்பட்ட 8 விண்கலங்களின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.


இந்த நிலையில் 9வது முயற்சியாக இன்சைட் விண்கலத்தை மே மாதம் 5ஆம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த விண்கலமானது செவ்வாயின் ஆழமான உட்பகுதிகளையும், பூகம்பங்களை பற்றியும் ஆராய்ச்சி செய்யும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் ஆய்வுக்காலம் இரண்டு வருடம் ஆகும்.
மணிக்கு 12,300 மைல் வேகத்தில் சென்ற விண்கலம் தரையில் இறங்குவதற்கு முன்னதாக வேகம் குறைந்து 8 கிமீ வேகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதனை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்ததும், அங்கு பணியாற்றும் பலரும் உற்சாகமாக தங்களுடைய வெற்றியை கொண்டாடினர். அதில் ஒரு சில விஞ்ஞானிகள் ஆனந்த உற்சாகத்தில் கண்ணீருடன் தங்களுடைய சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது நாசா விஞ்ஞானிகள் இன்சைட் எடுத்த முதல் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.



வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இன்சைட்! நாசா விஞ்ஞானிகள் கண்ணீருடன் கொண்டாட்டம் - Reviewed by Author on November 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.