நான் காணாமல் போய் விட்டேன்: பிரபல இயற்பியலாளர் உயிர் பயத்தில் எழுதிய கடிதம் -
ஜெருசலேமில் ஏலம் விடப்பட்ட அந்த கடிதம் 39,350 டொலர்களுக்கு விலைபோனது. 1922ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த கடிதம், வடக்கு ஜேர்மனியின் ரகசிய இடம் ஒன்றிலிருந்து ஐன்ஸ்டீனால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
தனது நண்பரும், ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சருமான Walther Rathenau, யூத வெறுப்பாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து பொலிசார், அடுத்து அவர் கொல்லப்படக்கூடும் என ஐன்ஸ்டீனை எச்சரித்தனர்.

தலைமறைவான அவர், தனது மறைவிடத்திலிருந்து தனது சகோதரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நான் எங்கிருக்கிறேன் என்று யாருக்கும் தெரியாது, நான் காணாமல் போய்விட்டதாக மற்றவர்கள் நம்புகிறார்கள் என்று எழுதியுள்ளதோடு, தனது சக ஜேர்மானியர்களுக்கிடையே யூத எதிர்ப்பாளர்கள் காணப்படும் நிலையிலும் தான் நன்றாக இருப்பதாகவும் எழுதியுள்ளார்.
பின்னர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போதுதான், அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட விவரம் அவருக்கு அறிவிக்கப்பட்டது.
ஹிட்லர் ஜேர்மன் சேன்ஸலராகும்போது ஐன்ஸ்டீன் வெளிநாடுகளில் தொடர்ந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.
பின்னர் தனது ஜேர்மன் குடியுரிமையைத் தூக்கியெறிந்த ஐன்ஸ்டீன், அமெரிக்கா சென்றதோடு வாழ்நாளின் கடைசி வரை அங்கேயேதான் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் காணாமல் போய் விட்டேன்: பிரபல இயற்பியலாளர் உயிர் பயத்தில் எழுதிய கடிதம் -
Reviewed by Author
on
November 16, 2018
Rating:
No comments:
Post a Comment