இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் இன்று மாவீரர் தினம் -
2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட 7 துயிலுமில்லாங்களை இராணுவத்தினர் கடந்தகாலங்களில் விடுவித்துள்ளனர்.
இதன்படி வன்னிவிளாங்குளம், முள்ளியவளை களிக்காடு, புதுக்குடியிருப்பு இரணைப்பளை, இரட்டை வாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் என ஜந்து மாவீரர் துயிலுமில்லங்களில் இன்றுஉணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளியவளை மற்றும் அளம்பில், விசுவமடு மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் மாவீரர் தினம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தேவிபுரம் மற்றும் வளைஞர்மட மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர்தின நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவீரர் துயிலுமில்லங்களில் ஆயிரக்காணக்கான மாவீராகள் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் மணலாறு பெருங்காட்டு பகுதியில் உள்ள ஜீவன் மாவீரர் துயிலுமில்லம் 10 வருடங்களான இராணுவத்தினரின் பூணர கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் இன்று மாவீரர் தினம் -
Reviewed by Author
on
November 27, 2018
Rating:

No comments:
Post a Comment