விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை -
யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் அ. ஜூட்சன் இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மேலும், இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு தடை இல்லை என்றும் புலிகள் அமைப்பின் சீருடைகள் , அவற்றை அணிந்த உருவப்படங்கள் , கொடிகள் என்பன காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகின்றது என்றும் நீதிவான் கட்டளையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் புலிகளின் சின்னங்கள், கொடிகள் மற்றும் பாடல்கள் என்பன பாவிப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று மாலை தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை -
Reviewed by Author
on
November 27, 2018
Rating:

No comments:
Post a Comment