கஜா புயல் காரணமாக வடக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்து -
இலங்கையில் திருகோணமலை தொடக்கம், யாழ், புத்தளம் வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுவதல் மீனவர்கள் துணிகரமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயலின் தாக்கம் யாழ், முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டு வருகின்றதுடன் தமிழகத்தில் தற்பொழுது பெரும் பாதிப்புக்களை கஜா புயல் ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்களை தருகின்றார் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட வானிலை நிலைய ஆய்வாளருமான சூரியகுமார்,
பெரும்பாலும் கடற்கரையோர மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வலியுறுத்தப்படுகின்றீர்கள் மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கஜா புயல் காரணமாக வடக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்து -
Reviewed by Author
on
November 16, 2018
Rating:

No comments:
Post a Comment