நான் தாய்மையடைய சிரமப்பட்டபோது---மனம் திறந்த ஒபாமா மனைவி -
இளம் தம்பதிகளுக்கு எடுத்துகாட்டாக ஒபாமா - மிச்சேல் தம்பதி வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தனது வாழ்க்கை பாதை குறித்த The Becoming என்ற புத்தகத்தை மிச்சேல் இன்று வெளியிடுகிறார். இதோடு திருமண வாழ்க்கையை தான் கையாண்ட விதம் குறித்து அவர் பேசியுள்ளார்.
மிச்சேல் கூறுகையில், நாங்கள் பிறருக்கு ரோல் மாடல்களாக இருக்கும் பட்சத்தில், நாங்கள் எங்களுக்கு முதலில் நேர்மையாக இருப்பது அவசியம் என்று நினைத்தோம். திருமண உறவுக்குள் நுழைந்தால், சில சமயம் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்று தோன்றலாம். இது இயல்பாகப் பலருக்கும் நிகழக்கூடியதுதான். ஏனென்றால், நானும் அவ்வாறு உணர்ந்திருக்கிறேன்.

இப்படியான உணர்வு வந்ததும், நாங்கள் இருவரும் கவுன்சலிங் சென்றோம். எங்களுடைய வேறுபாடுகளை நாங்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு கவுன்சலிங் உதவியது என கூறியுள்ளார்.
இதனிடையில் The Becoming புத்தகத்தில், அவரும் கணவர் ஒபாமாவும் சந்தித்த சிக்கல்களைப் பற்றி விரிவாக எழுதியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
1992-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்க, மிச்சல் ஒபாமா தாய்மையடைய மிகவும் சிரமப்பட்டதால் இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டன என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

நான் தாய்மையடைய சிரமப்பட்டபோது---மனம் திறந்த ஒபாமா மனைவி -
Reviewed by Author
on
November 13, 2018
Rating:
No comments:
Post a Comment