அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகவும் ஆபத்தான பகுதிகளின் பட்டியல் வெளியானது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை -


பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி தனியார் நிறுவனம் ஒன்று உலகின் மிகவும் ஆபத்தான பகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிரியா, லிபியா மற்றும் ஆப்கான், சோமாலியா உள்ளிட்ட நாடுகள் உலகின் ஆபத்தான பகுதிகள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
உலகமெங்கிலும் உள்ள சுற்றுலாபயணிகளை எச்சரிக்கும் பொருட்டு ஆபத்தான நாடுகள் பட்டியலை ஆண்டு தோறும் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் 2019 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆபத்தான நாடுகளின் பட்டியலுடன் சிறந்த நாடுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.
பின்லாந்து, நோர்வே, ஸ்விட்சர்லாந்து, ஸ்லோவேனியா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை மிக மிக குறைவான ஆபத்து கொண்ட நாடுகள் என குறிப்பிட்டுள்ளனர். பிரித்தானியா உள்ளிட்ட எஞ்சிய மேற்கு ஐரோப்பா நாடுகளும் சீனா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை குறைந்த ஆபத்து கொண்ட பட்டியலில் சேர்த்துள்ளனர்.
சுகாதர சிக்கல் கொண்ட நாடுகளாக தென் சூடான், நைஜர், ஐவரி கோஸ்ட் மற்றும் சியரா லியோன் என பட்டியலிட்டுள்ளது.
சுகாதாரத்திற்கு மிகுந்த அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகளாக ஈராக், லெபனான், வெனிசுலா மற்றும் வடகொரியா நாடுகளை குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி துருக்கி, கனடா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை சுகாதார அச்சுறுத்தல் மிக குறைவான நாடுகள் என குறிப்பிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்கா உட்பட ஆப்பிரிக்க சாலைகள் அனைத்தும் கடும் சுகாதார சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

சுற்றுலாபயணிகள் அதிகம் விரும்பும் நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து, சவுதி அரேபியா, ஈரான் மற்றும் கஜகஸ்தான் என குறிப்பிட்டுள்ளனர். போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள் என ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளை பட்டியலிட்டுள்ளனர்.
பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் சாலை போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் மிக குறைந்த நாடுகள் எனவும் பட்டியலிட்டுள்ளனர்.

உலகின் மிகவும் ஆபத்தான பகுதிகளின் பட்டியல் வெளியானது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை - Reviewed by Author on November 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.