உலகிலேயே இந்த நாட்டினர் தான் கடின உழைப்பாளிகள்! வெளியான ஆய்வுத் தகவல் -
சர்வதேச மனிதவள மேலாண்மை நிறுவனம் ஒன்று, கடினமாக உழைக்கும் மக்கள் எந்த நாட்டில் உள்ளனர் என்பது குறித்த ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வில், ஊதியம் கூடாமல் அப்படியே இருந்தால் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும் என, உலகளவில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் 20 சதவித மக்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை பார்த்தால் போதும் என தெரிவிப்பதாகவும், இந்தியாவைப் பொறுத்தவரை 31 சதவித மக்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற நிலையில் திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில், வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்வதில் 69 சதவித மக்கள் திருப்தியடைவதால், உலகிலேயே இந்தியா தான் அதிக கடின உழைப்பாளிகளைக் கொண்ட நாடாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் மிக கடின உழைப்பாளிகளை கொண்ட நாடாக மெக்சிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த ஆய்வானது அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன், மெக்சிகோ, பிரித்தானியா ஆகிய நாடுகளில் பணிபுரியும் முழு நேர தொழிலாளர்கள், பகுதி நேர தொழிலாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.
உலகிலேயே இந்த நாட்டினர் தான் கடின உழைப்பாளிகள்! வெளியான ஆய்வுத் தகவல் -
Reviewed by Author
on
November 12, 2018
Rating:

No comments:
Post a Comment