உலகில் வாழ்வதற்கு அதிக பணம் தேவைப்படும் டாப் 10 நாடுகள்!
அப்படி இருக்கும் போது அவர்கள் தங்களின் இருப்பிடம் மற்றும் போக்குவரத்து செலவு போன்றவற்றிற்கே வாங்கும் சம்பளத்தில் பாதியை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வாழ்வதற்கு அதிக பணம் தேவைப்படும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பிடம், அன்றாட தேவைக்கு வாங்கப்படும் பொருட்கள் மற்றும் போக்குவரத்து செலவு போன்றவைகளை அடிப்படையாக வைத்து வெளியிட்டுள்ளது.

அதில் பெர்முடா முதல் இடத்தையும், சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வாழ்வதற்கு மிகவும் குறைவான பணம் தேவைப்படும் நாடுகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில் பாகிஸ்தான் முதல் இடத்தையும், எகிப்து இரண்டாவது இடத்தையும், உக்ரைன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த அட்டவணைப் பட்டியல் 2018-ஆம் ஆண்டை அடிப்படையாக வைத்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு அதிகம் பணம் தேவைப்படும் நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா 29-வது இடத்திலிருந்ததாகவும், தற்போது 24-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உலகில் வாழ்வதற்கு அதிக பணம் தேவைப்படும் டாப் 10 நாடுகள்!
Reviewed by Author
on
December 17, 2018
Rating:
No comments:
Post a Comment