அண்மைய செய்திகள்

recent
-

222 பேரை பலிகொண்ட இந்தோனேஷியா....ருத்ரதாண்டவம் ஆடிய சுனாமி..


இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர சுனாமியின் காரணமாக 222 பேர் பலியாகியுள்ள நிலையில், அங்கு மின்சாரம், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட சுனாமி காரணமாக தற்போது வரை கிடைத்த தகவலின் படி 222 பேர் பலியாகியுள்ளதாகவும் 800 பேர் காயமடைந்திருப்பதாகவும், 30 பேர் வரை காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunda Strait பகுதியில் இருக்கு கடற்கரையில் சுமார் 16 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி அலை அங்கிருந்த 430 வீடுகள், 9 ஹோட்டல்கள் மற்றும் 10 கப்பல்களை தரைமட்டமாக்கியுள்ளது.


ருத்ரதாண்டவம் ஆடிய இந்த சுனாமி பேரலையின் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கின்றன.
அதுமட்டுமின்றி ஈடுபாடுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் இறங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் எராளமான மக்கள் தங்கள் வீடு, உடமைகள் போன்றவைகளை இழந்து தவித்து வருவதால், அங்கு நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், இந்த சுனாமி பாதிப்பு காரணமாக மின்சாரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன, இங்கிருக்கும் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒரு சில வீடுகள் முன்பு அலை அடித்து வந்த மரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை உள்ளதால், அவை எல்லாம் புல்ட்ரோசர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அங்கிருக்கும் மின்சார கோபுரங்கள் போன்றவைகள் சாய்ந்துள்ளதால், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் நெருங்கவிருக்கும் நிலையில் இப்படி ஒரு பேரழிவு ஏற்பட்டிருப்பது இந்தோனேஷிய மக்களுக்கு மிகப் பெரும் துயரத்தை கொடுத்துள்ளது.
முதல் பகுதி
கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஆகியவற்றால் அதிகாலை 2.30 மணி அளவில் இந்தோனேஷியாவின் செராங், பன்டேகிளாங், சவுத் லாம்பங் ஆகிய பகுதிகளில் திடீரென இந்த சுனாமி ஏற்பட்டது.




இதனால் சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகள், 10 உயர்தர ஹோட்டல்கள், கப்பல்கள் போன்றவை சேதமடைந்துள்ளன.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட சுனாமியால் இன்னும் உயிர்ச் சேத விவரங்கள் முழுமையாக விவரங்கள் வெளிவரவில்லை, ஆனால் காலையில் 20 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 16பேர் உயிரிழந்துள்ளதாகவும் 600-க்கும் மேற்பட்டார் காயமடைந்திருப்பதாகவும், 30 பேர் காணவில்லை என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.




இந்தோனேசியா நிலவியல் மற்றும் வானிலை மையத்தின் ஆய்வாளர்கள் இது குறித்து கூறுகையில், அனாக் கிராகட்டு பகுதியில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்ததன் காரணமாகவும், கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும் இந்த சுனாமி ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நேற்று பவுர்ணமி என்பதால், கடல் ஆவேசமாகக் காணப்பட்டது. அனைத்து ஒன்று சேர்ந்த நிகழ்வால் சுனாமி அலைகள் உருவாகின. உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்த சுனாமி அலைகள் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுனாமியால், ஜாவா தீவில் உள்ள பன்டேகிளாங் மண்டலத்தின் பான்டென் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் புகழ்பெற்ற ஜங் குலான் தேசிய பூங்கா, புகழ்பெற்ற கடற்கரைகள் இருக்கின்றன. அவை கடுமையாக சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன




சுமத்ராவின் தெற்குப் பகுதியில் உள்ள பந்தர் லம்பங் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஆளுநர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்திய பெருக்கடலில் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் கிராகாகட்டு எரிமலை 305 மீற்றர் உயரம் கொண்டது. தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 200 கி.மீற்றர் தொலைவில் இந்த எரிமலை அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து குமுறிக்கொண்டே இருந்த எரிமலை தற்போது வெடித்துள்ளது.
இதன் காரணமாக விமான சேவைகள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.




இந்த சம்பவத்தைக் கண்ட பண்டேகிளாங் பகுதியைச் சேர்ந்த ஓய்ஸ்டின் லுன்ட் என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், நான் கடற்கரையில் நின்று எரிமலை வெடித்ததைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது 20 மீற்றர் உயரத்துக்குக் கடல் அலை எழும்பியதைப் பார்த்து நான் தப்பித்து ஓடினேன்.
அடுத்த அலை எழும்பி கடற்கரைப்பகுதியில் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது.நான் கருக்கு பின்னால் இருந்த தூணை இருக்கமாகப் பிடித்து மறைந்துகொண்டேன். அதன்பின் உள்ளூர் மக்களின் உதவியுடன் எனது குடும்பத்தாரை பாதுகாப்பாக மீட்டேன் என்று கூறியுளளார்.



அதுமட்டுமின்றி அங்கிருக்கும் கடற்கரையில் இசைநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென்று கடலில் இருந்து அலைகள் எழுந்து வந்ததால், அங்கிருந்த அனைவரையும் அலைகள் அடித்துச் சென்றுள்ளது.
அது தொடர்பான வீடியோவும், அதுமட்டுமின்றி அலைகள் வருவதை அறிந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியில் இந்தோனேசியாவில் மட்டும் 1.20 லட்சம் பலியானார்கள். அந்த நினைவு தினம் அனுசரிக்க இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.
சுனாமி தாக்கிய பகுதியில் ஏராளமான மக்களைக் காணவில்லை என்பதால் உறவினர்களை இழந்தவர்கள் கடற்கரையில் தேடி வருகின்றனர். இதனால், உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

222 பேரை பலிகொண்ட இந்தோனேஷியா....ருத்ரதாண்டவம் ஆடிய சுனாமி.. Reviewed by Author on December 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.