அண்மைய செய்திகள்

recent
-

395 குடும்ப உறுப்பினர்கள்... 119 ஆண்டுகள் வாழ்ந்து சாதித்த பெண்: வாழ்க்கை ரகசியம் இதுதான் -


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நல்லம்மாள் என்ற மூதாட்டி 119 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

1899-ம் ஆண்டு பிறந்தார் நல்லம்மாள். இவருக்கு தங்கையா, தவபிரகாசம் என்ற 2 மகன்களும், பத்மாவதி, காந்திமதி, அம்பிகாபதி, கலைமதி, கோமதி என 5 மகள்களும் பிறந்தனர்.
இவர்கள் மூலம் 22 பேரன், பேத்திகள், 45 கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள், அவர்கள் மூலம் எள்ளு பேரன், எள்ளு பேத்தி என மொத்தம் 395 பேர் இவர்கள் குடும்பத்தில் மட்டும் உள்ளனர்.

4வது தலைமுறையுடன் வாழ்ந்த நல்லம்மாள் நேற்று இறந்த தகவல் அறிந்ததும் உறவுக்காரர்கள் அனைவரும் திரண்டு விட்டனர். நல்லம்மாளின் எள்ளு பேரன், பேத்தி வரை குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமே 395 தொட்டது.
அதன் பிறகு உறவுக்காரர்களும், கிராமத்தினரும் திரண்டு அஞ்சலி செலுத்தி நல்லம்மாளின் உடலை அடக்கம் செய்தனர்.
கடைசிவரை நல்லம்மாள் பார்க்கும் திறன், கேட்கும் திறன் ஆகியவற்றுடன் பேசும் திறனையும் பெற்றிருந்தார்
வயலுக்கு தினசரி வேலைக்கு சென்று உழைத்த நல்லம்மாள் கடைசி வரை ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் என இயற்கையுடனேயே வாழ்ந்து மறைந்துள்ளார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் முதன் முறையாக அவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போதும் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் தான் நேற்று அவர் 119-வது வயதில் இறந்துள்ளார். கடைசியில் உறவுகளோடு இணைந்து வாழ்ந்தால் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழலாம் என்ற உண்மையை கூறி மறைந்துள்ளார் நல்லம்மாள்.

395 குடும்ப உறுப்பினர்கள்... 119 ஆண்டுகள் வாழ்ந்து சாதித்த பெண்: வாழ்க்கை ரகசியம் இதுதான் - Reviewed by Author on December 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.