அண்மைய செய்திகள்

recent
-

தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுவதால் உடலில் நிகழும் அற்புத மாற்றங்கள்!


தேங்காய் எண்ணெய்யை தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிடுவதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு காண்போம்.
சமையலுக்கும், தலைக்கு தேய்க்கவும் மட்டுமே தேங்காய் எண்ணெய் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தேங்காய் எண்ணெய் மூலம் உடலில் பல நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம்.
வலுவான தசை
உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்பவர்கள், தினமும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சாப்பிட்டு வருவதன் மூலம் அவர்களின் தசை வளர்ச்சி அதிகரிக்கும். அத்துடன் உடல் கட்டுமஸ்தாக மாறும்.
சிறுநீரக பாதை தொற்றுகள்
தேங்காய் எண்ணெயில் ஆண்டி பையோட்டிக் உள்ளது. எனவே இது சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களை முற்றிலுமாக சரி செய்யும். எனவே, தினமும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செரிமான கோளாறுகள்
செரிமான கோளாறுகள் உள்ளவர்களும் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல தீர்வை பெறலாம்.
கல்லீரல்
கல்லீரல் உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும். எனவே கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி அதன் செயல்பாட்டை சீராக்க, தினமும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை பருக வேண்டும்.
உடல் பருமன்
உடல் பருமனுக்கு முக்கிய காரணம் ஹார்மோன்கள். இவற்றை சமநிலையில் வைத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்காது. தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் குறைந்து உடல் எடை அதிகரிக்காது.
புற்றுநோய்
புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை தேங்காய் எண்ணெய்யிற்கு உள்ளதாக கூறப்படுகிறது. Helicobactor pylori என்ற வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை தேங்காய் எண்ணெய் அழிக்கவல்லது. எனவே, தினமும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை சாப்பிட்டு வர வேண்டும்.
இதய ஆரோக்கியம்
கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது. இதிலுள்ள ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் ரத்த நாளங்களில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்தக்கூடியவை.
பிற உறுப்புகள்
உச்சம் முதல் உள்ளங்கால் வரை உள்ள கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது. குறிப்பாக கல்லீரல், சிறுநீரகம், இதயம், கணையம் உள்ளிட்ட உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது.

தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுவதால் உடலில் நிகழும் அற்புத மாற்றங்கள்! Reviewed by Author on December 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.