அண்மைய செய்திகள்

recent
-

நாட்டை யாரவது ஆண்டுவிட்டு போகட்டும் தமிழ் தலைமைகளே---மன்னார் புதைகுழி தொடர்பாக தீர்வு என்ன...

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில்   கடந்த வாரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று கிடைக்கப்பெற்றது எவ்வளவு கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு  அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்று உண்மை வெளிவந்துள்ளதாக 

முன்னாள் வடமாகண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்

மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்னார் சதோச மனித எச்சங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு தூரக பிரநிதிகள் மன்னார் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்

தொடர்ந்தும் மன்னார் மனித புதைகுழியில் மனித எச்சங்கள்  மீட்க்கப்பட்டு வருவது என்னமும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்

உலகமே வெட்க்கப்படவேண்டிய விடயம் 21 குழந்தைகள் உட்பட பல எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது தமிழர்கள் என்ற காரணத்திற்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற நிலையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என எல்லோரும் எதிர்பார்பதாகவும் 

இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது இந்த சம்பவத்திற்க்கு யார் உரியவர்கள் யாரால் கொல்லாப்பட்டர்கள் என்ற உண்மை வெளிவர வேண்டும் எனவும்

வடக்கு கிழக்கில் ராணுவம் உட்பட முப்படையினறும் வெளியேறிய  அத்தனை இடங்களிலும் மனித புதைகுழி இருக்கலாம் என சந்தேகம் வழுவாக எழுத்துள்ளது 

எனவே இவை அனைதும் சர்வதேச மத்தியஸ்துடன் கண்கானிப்பின் கீழ் அத்தனை மனித புதைகுழிகளும் கிலரப்படவேண்டும் எனவும் இதனூடாக எதிர்காலத்திலாவது ஈழ தமிழர்கல் இன அழிப்புக்கு ஆளாகமல் இருக்க வேண்டும் என விரும்புகின்றோம் என தெரிவிதார்

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தலைவர்கள் இப்போது தெற்கில் ஏற்ப்பட்டுள்ள இந்த குழப்ப நிலையில் அங்கிருக்கும் பேரினவாத கட்சிகள் எதுவாகவும் நாட்டை ஆண்டுவிட்டு போகட்டும் ஆனால் எங்களுக்கு இன்றுவரை மனித  புதைகுழி  தொடர்பாக ஆழமான கருத்தோ அல்லது இறுக்கமான கருத்துக்களோ அழுத்தங்களோ வழங்கப்படாத நிலையில் இந்த புதைகுழி தொடர்பான உண்மைகள் வெளிவருவதன் ஊடக பல முடிச்சுக்கள் பல உண்மைகள் வெளிவரும் வாய்ப்புகள் உருவாகும் என்று நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

நாட்டை யாரவது ஆண்டுவிட்டு போகட்டும் தமிழ் தலைமைகளே---மன்னார் புதைகுழி தொடர்பாக தீர்வு என்ன... Reviewed by Author on December 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.